‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரேஷ்மாவின் மகனா இது?… உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காங்களா?… புகைப்படம் இதோ…

By Begam

Published on:

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவின் மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ரேஷ்மா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் நடித்த வேலைனா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் 40 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார்.

   

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அபி டெய்லர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். டீஆர்பி யில் நல்ல ரேட்டிங்  பெற்று வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கதையில் வில்லியாக நடித்து கலக்கி வருகிறார் ரேஷ்மா.

நடிகை ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அவர் தனது மகன் ராகுல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகன் இருக்காங்களா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம் இதோ….