மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். கௌதம் வாசுதேவன் இயக்கிய காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் மகிழ் திருமேனி.

2019 ஆம் ஆண்டு நகைச்சுவை திரைப்படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தடையற தாக்க, மீகாமன், தடம், கழகத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். கழக தலைவன் திரைப்படம் மகிழ் திருமேனிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது இவர் இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் மகிழ் திருமேனி கலந்து கொண்டு வருகிறார்.
அப்போது இதுவரை சொல்லாத ஒரு ரகசியத்தை கூறியிருக்கிறார் மகிழ் திருமேனி. அதாவது அவருடைய உண்மையான பெயர் மகிழ் திருமேனி என்பது கிடையாது அப்பா அம்மா வைத்த பெயர் வேறு. மகிழ் திருமேனி என்ற பெயரை நானாக தான் வைத்துக் கொண்டேன் சுத்தமான தமிழ் பெயர் எனக்கு வேண்டும் தமிழ் பற்று எனக்கு அதிகம் என்பதால் அப்படி வைத்தேன் என்று கூறினார். அந்த நேர்காணலில் தன்னுடைய உண்மையான பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.

இதை அறிந்த நெட்டிசன்கள் இவரைப் பற்றி ஒரு சில கேள்விகளை கேட்கும் விதத்தில் பேசி இருக்கிறார்கள். அதாவது மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. அப்போது அவரது யூனிட்டில் வேலை பார்த்தவர்கள் அதிகம் பேர் ஹைதராபாத் மற்றும் மும்பையை சேர்ந்தவர்கள். இவர் தமிழ் பற்று அதிகம் கொண்டிருப்பவர் என்று கூறியதால் ஏன் தமிழ் ஆட்களை அவர் வேலைக்கு அமர்த்த வில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
