8 முதல் 80 வயது வரை அனைவரும் விரும்பும் வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து.. வெளியான ஆய்வறிக்கை..!

By Nanthini on மாசி 2, 2025

Spread the love

தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் வாசனை திரவியம் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. இது காலப்போக்கில் அதிகரித்து வரும் நிலையில் குளிர் காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் நிறைந்திருக்கும் ஆபத்தை பற்றி யாரும் அறிவதில்லை. வயது மற்றும் பாலினம் என எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் வாசனை திரவியம் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரும் இதனை பயன்படுத்துகிறார்கள். உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்துள்ளது. 8 முதல் 80 வயது வரை உள்ள அனைவருக்கும் வாசனை திரவியம் பயன்படுத்தும் பழக்கம் உண்டு.

வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து - Daily Ceylon

   

JAMA என்ற நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் அதிகமாக உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இத்தகைய வேதிப்பொருளில் இருந்து முற்றிலும் விலகி இருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. நல்ல வாசனை திரவியத்தை பயன்படுத்துவது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தும் சமயத்தில் அது ஆபத்தையும் உருவாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இது உடலில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

   

பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன/Contains chemicals such as phthalates

 

இத்தகைய வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இருதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பெரிதும் பாதிக்கக்கூடும். JAMA ஆய்வின்படி இது அதிவேக தன்மைக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குழந்தைகள் மத்தியில் பிரச்சனைகள் அதிகமாக காணப்படுவதாகவும் அவர்களின் ஆராய்ச்சியை கண்டறிந்து உள்ளது. அவர்களுக்கு எண்களை புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் அதிகம் பாதிக்கின்றன.

வாசனை திரவியம் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

அது மட்டுமல்லாமல் உடலில் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் இதனால் ஏற்படலாம். வாசனை திரவியங்களில் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் இவ்வளவு இருப்பதால் பித்தலேட் ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே எளிதான வழி. இந்த மாற்றம் ஒரே இரவில் சாத்தியம் இல்லை. அதனைப் போலவே துணிகளை துவைக்கும் போது வாசனை திரவியங்கள் அல்லது பிறர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது என அறிவுறுத்தப்படுகிறது..