தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இபிஎஸ் க்கு எதிராக போர் பொடி தூக்கிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்ட நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில் விஜய் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியை தன்னால் முடிந்த அளவுக்கு பலப்படுத்துவேன் என்றும் விஜய்க்கு பெருசாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் காத்திருப்பதாகவும் செங்கோட்டையன் சபதம் எடுத்திருந்தார்.
இப்படியான நிலையில் திமுகவில் செங்கோட்டையனுக்கு நண்பர்கள் இருந்தாலும் அவர் அங்கு செல்லவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் திமுகவும் ஒரு காரணம் என டிவிஸ்ட் அடிக்கின்றனர் விவரப் புள்ளிகள். தற்போது திமுகவில் இருக்கும் தோப்பு வெங்கடாஜலத்திற்கும் செங்கோட்டையகனுக்கும் அதிமுகவில் இருந்தபோதே ஏழாம் பொருத்தம் தான். எனவே திமுகவுக்கு செங்கோட்டையன் வருவதை அவர் விரும்பவில்லை என தெரிகிறது. இதனால்தான் திமுகவும் செங்கோட்டையனை வற்புறுத்தவில்லை என கூறப்படுகிறது.
