“தமிழிசை, சீமானை வீழ்த்தியவர்களுக்கெல்லாம் பதவி… ஆனா எனக்கு?”…. VS பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு உண்மை….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் திடீர் உடல்நலப் பாதிப்பிற்கு, அவரது ஆதரவாளர்கள் அளித்த தீவிர மன அழுத்தமே காரணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

‘தமிழிசை, சீமான் போன்ற முன்னணித் தலைவர்களைத் தேர்தலில் வீழ்த்தியவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி தேடிவந்த நிலையில், மு.க.ஸ்டாலினையே எதிர்த்து வெற்றி பெற்ற உங்களுக்குத் தகுந்த பதவி கிடைக்கவில்லையே’ என அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாகக் கேட்டு அவரைக் குடைந்தெடுத்துள்ளனர். நாளும் தொடர்ந்த இந்த கேள்விகளால் கடும் மனவேதனையிலும் உளைச்சலிலும் சிக்கிய வி.எஸ். பாபுவுக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.