வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதால், தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கையாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் மழைப்பொழிவு காரணமாகக் கடலோரப் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
