நடனப்புயல் பிரபுதேவாவின் அம்மா இவர்தானா?… முதன்முறையாக இணையத்தில் வெளியான வீடியோ இதோ!…

நடனப்புயல் பிரபுதேவாவின் அம்மா இவர்தானா?… முதன்முறையாக இணையத்தில் வெளியான வீடியோ இதோ!…

நடிகர் பிரபுதேவா பாலிவுட்டில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிக்கு தனது பெற்றோர்களை அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின் முன்னணி ஹீரோவாக முன்னேறியவர் பிரபுதேவா. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர்  திடீரென்று நடிப்பில் சிறிது இடைவெளி விட்டு இயக்குனராக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி நடன இயக்குனராகவும் விளங்குகிறார். இவரை போல நடனமாட பலர் முயற்சி செய்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. நடிகர் பிரபுதேவா தனது ரசிகர்களால் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகிறார். தற்பொழுது இவர் நடிப்பு, நடனம் என இரண்டிலும் பிஸியாக திரையுலகில் கலக்கி கொண்டு வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. சமீபத்தில் இவர் மலையாள படமான ‘ஆயிஷா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தார். அப்பாடல் மிகப் பிரபலமடைந்தது.

நடிகர் பிரபுதேவாவின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் பிரபல நடன இயக்குனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நடிகர் பிரபுதேவாவின் அம்மாவை பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்பொழுது முதன்முறையாக பிரபுதேவா தனது பெற்றோர்களை பாலிவுட்டில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Prabhu Deva Fans (@prabhu_deva_fans)

Begam