நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் தனது திருமண நாளை முன்னிட்டு தனது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, சினேகா உள்ளிட்ட தமிழின் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட். இவரது குரல் வளமை மற்றும் டப்பிங் திறமைக்காக தனி ரசிகர் கூட்டம் சேர்ந்து விட்டது. அஜித் நடித்த ‘பாசமலர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகில் தோன்றினார். உல்லாசம், உள்ளம் கொள்ளை போகுதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் பதித்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘இப்படிக்கு தென்றல்’ என்ற சீரியல் மூலம் முதன்முதலாக சின்ன திரையில் என்ட்ரி ஆனார். இதைத்தொடர்ந்து சித்தி ,கோலங்கள் என சின்னத்திரையில் நடித்து கலக்கிக் கொண்டிருந்தார். தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி விருது’ கொடுத்து சிறப்பித்தது.
பின்னர் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகியவர் தனியார் வானொலியில் ரேடியோ ஜாக்கி ஆக பத்து வருடங்கள் பணியாற்றினார். தற்பொழுது நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக செயல்பட்டு வருகிறார். 2010ல் ராஜகோபால் என்ற ஐடி துறையில் பணியாற்றுபவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது திருமண நாளன்று தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு தன் கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இவர்தான் நடிகை தீபா வெங்கட்டின் கணவரா? என்று கூறி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…