#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். டாப் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் இருந்த போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியலில் களமிறங்க போவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி தனது கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார் விஜய். தற்போது நாளை அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை பார்க்கும்போதே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கார், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருடன் விஜயின் கட்அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் 100 அடி கொடிக்கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட இருப்பதாகவும் வீடியோக்கள் வெளியானது. இந்த 100 அடி கொடி கம்பமே அவ்வளவு பார்த்து பார்த்து பல சிறப்பம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றவிருக்கும் இந்த கொடிக்கம்பம் 101 அடியில் இருக்கிறது. இந்த கொடிக்கம்பத்தில் 20 அடி உயரம் 30 அடி அகலத்தில் தயாரான கொடி ஏற்றப்பட இருக்கிறது. இந்த கொடி கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த கொடி கம்பத்தின் கீழ் ஆறு அடி உயரத்தில் கல்வெட்டு வைக்கப்பட இருக்கிறது. விஜய் அவர்கள் இந்த கொடியை ரிமோட் மூலம் ஏற்ற இருக்கிறார். அடுத்த 25 வருடங்கள் இந்த கொடிக்கம்பம் துரு பிடிக்காமல் இருப்பதற்காக வேதியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது. மேலும் 10 ஆண்டுகள் கொடிக்கம்பம் அங்கே இருக்கும் படியாக நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் பேசப்பட்டு இருக்கிறது. ஒரு கொடி கம்பத்துக்கு இத்தனை விதமாக யோசித்து பார்த்து செய்திருக்கிறார் நடிகர் விஜய் என்பது ஆச்சர்யமடைய வைக்கிறது.
கோவை நகரில் நேற்று நடிகை திரிஷா ஒரு பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு,…
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில், தனது மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்த 55 வயதான ரெஹானா என்ற பெண்,…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம்,…
கேரள மாநிலம் வயநாடு பகுதியில், விசா மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 80,000 மோசடி செய்த வழக்கில்…
ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மாரடைப்பு மரணமாகக் கருதப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக…
மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஹாலா தாலுகாவிற்குட்பட்ட சாத்வே கிராமத்தில் விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசிக்கும்…