#image_title
உலக அழகி என்றால் நம் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். 1990களில் உலக அழகி பட்டம் வென்று இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஜீன்ஸ் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். எனினும் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய் என்று நினைத்துப் பார்க்கும்போது நமக்கு நினைவுக்கு வருவது பிரசாந்துடன் அவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் தான்.
இந்தத் திரைப்படம் மற்றும் அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் எவர்கிரீனாக இருக்கிறது. 1999 இல் வெளியான இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் அந்த நேரத்திலேயே உலகத்தின் ஏழு அதிசயங்களிலும் சென்று படப்பிடிப்பு நடத்தி ஒரு பாடலை உருவாக்கி இருப்பார்கள். அந்த பாடலை இப்போது அதேபோல் செய்ய வேண்டும் என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று என்று பிரசாந்தே ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என இறுதியில் இந்தி வரை சென்று இந்தியாவின் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரியப்போதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ள அமிதாப்பச்சன் அபிஷேக் பச்சன் அவர்களெல்லாம் தனியாக வர ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக வந்து கலந்து கொண்டார். இது அந்த சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தியது.
மேலும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராய்யும் Gray Divorce செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Gray Divorce என்பது என்னவென்றால் 50 வயதுக்கு மேல் செய்யும் விவாகரத்துக்கு தான் Gray Divorce என்று கூறுகிறார்கள். அவர்களது மகள் ஆராத்யா பச்சனுக்காக ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் இத்தனை நாள் பிரியாமல் இருந்து வந்ததாகவும் இனி அவர்கள் Gray Divorce செய்ய இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…