உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி…மயோனைஸ்- க்கு அதிரடி தடை… எதற்காக தெரியுமா…?

Spread the love

இன்றைய உலகம் பாஸ்ட் புட் மயமாகிவிட்டது. எங்கு திரும்பினாலும் பாஸ்ட் புட் கடைகள் தான் ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது. 10 அடி 20 அடி தொலைவில் ஒரு பாஸ்ட் புட் கடை எந்த விகிதத்தில் பெருகிக்கொண்டே இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடித்தமான உணவு எது என்று கேட்டால் பிரியாணி பரோட்டா தந்தூரி ஷவர்மா பீசா பர்கர் என்று தான் கூறுவார்கள்.

ஒருவர் கூட சிறுதானிய உணவுகள் கூழ்கள் போன்ற உடலுக்கு சத்தான உணவுகள் எது உண்டோ அதை பிடிக்கும் என்று யாருமே கூறுவதே கிடையாது. இந்த உணவுகள் தான் உடலுக்கு முதலாவதாக தீங்கு விளைவிக்க கூடியது. பல நோய்களை உண்டாக்கக்கூடியது. இதனாலே இளம் வயது மரணங்கள் அதிகமாக நடக்கிறது.

இந்த உணவுதான் சரியில்லை என்று பார்த்தாலும் அந்த உணவு தயாரிக்கும் இடத்திலும் ஏகப்பட்ட கலப்படங்கள் கெட்டுப் போன இறைச்சி மசாலாக்கள் கொண்டு தயாரிப்பது என அன்றாடம் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் புதுசு புதுசாக வித விதமாக தேவையில்லாதவற்றை எல்லாம் இறக்குகிறார்கள். அதில் ஒன்றுதான் மயோனைஸ்.

தந்தூரி சிக்கன் ஷவர்மா ஆகியவற்றிற்கு இணையாக வெள்ளை நிறத்தில் முட்டையை வைத்து செய்யப்படும் சட்னி போன்ற வகை தான் மயோனைஸ். தாந்தூரி சிக்கனாகட்டும் சவர்மா ஆகட்டும் இந்த மயோனைஸில் தொட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா என்று கூறுபவர் பலர் இருக்கிறார்கள். இந்த சுவைக்கு அடிமையாக இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. தெலுங்கானா அரசின் உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்ட ஆய்வில் மனிதர்கள் உண்ண தகுதி இல்லாத உணவாக இந்த மயோனைஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதனால் தெலுங்கானா அரசுக்கு இந்த மயோனைஸை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதன் விளைவாக மற்ற மாநிலங்களிலும் மயோனைஸ் விரைவில் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உணவு பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சிகரமான செய்தியாக தான் இருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உடல் நலன் என்பது மிகவும் முக்கியம். அதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

admin

Recent Posts

“அரசியலுக்கு வருவீங்களா?”…. செய்தியாளர் கேட்ட கேள்வி… சிரித்துக்கொண்டே தனுஷ் செய்த காரியம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 'தமிழக…

1 minute ago

தவெக வேட்பாளர் த்ரிஷா?… திருச்சி கிழக்கில் தீயாய் பரவும் போஸ்டர்… அதிரும் தமிழக அரசியல்…!

கோவை நகரில் நேற்று நடிகை திரிஷா ஒரு பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு,…

6 minutes ago

ஐயோ கொடுமையே… மாமாவின் இறுதிச் சடங்கிற்குச் சென்ற சோகம்… சாலையில் காத்திருந்த விபத்து… அதிவேக லாரி மோதி பெண் பரிதாப பலி… திடுக்கிடும் CCTV காட்சி…!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில், தனது மாமாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்த 55 வயதான ரெஹானா என்ற பெண்,…

9 minutes ago

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. முழு விபரம்….!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம்,…

11 minutes ago

திக்… திக்… ஆட்டோ சவாரியில் கொடூரம்… மாரடைப்பு என நினைத்த குடும்பம்… பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மாரடைப்பு மரணமாகக் கருதப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் கொலை வழக்காக…

18 minutes ago