விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது . அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சியானது 70 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தையும் நெருங்கி வருகிறது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் ஆரம்பித்த நாளிலிருந்தே ஒன்றாக சேர்ந்து சுத்திக் கொண்டிருந்த மாயா – பூர்ணிமா இருவருக்குமிடையில் கடந்த சில நாட்களாகவே சண்டை மட்டும் தான் போட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .அதில் ரவீனா மற்றும் மாயா இருவரும் நடனமாடுகின்றனர்.

பூர்ணிமா அந்த நடனத்தை பார்த்து ‘ரவீனா கொஞ்சம் நல்லா ஆடுச்சு. உங்களுக்கு ஸ்பேஸ் விட்டு ஆடுறதுக்கு டைம் கொடுத்துச்சு’ என்று ரவீனாவை தூக்கி வைத்து பேசி மாயாவை கொஞ்சம் மட்டம் தட்டி விட்டார். இதை தொடர்ந்து மாயா பூர்ணிமாவிடம் இதைப் பற்றி கேள்வி கேட்க பூர்ணிமா ‘அப்பனா என்ன தான் பேசுறது? என கேட்க, ‘ஏன் புரிஞ்சுக்காம எப்பவும் நீங்க இப்படித்தான் பண்றீங்க? அங்க நான் வந்து ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன் .அதை நீங்க மாத்தி விடுறீங்க’ என்று மாயாவும் கேட்க அங்கே சண்டை வெடிக்கிறது.

‘இப்ப நீங்க சொன்னது மூலமா இத பத்தி இனி பேசறதே வேஸ்ட் ‘என்று பூர்ணிமாவும் கூறி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். ஒவ்வொரு டாஸ்காக கொடுத்து இருவரையும் பிரிக்க மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார் பிக் பாஸ். ஒன்றாக சுற்றி சதி வேலைகளுக்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருந்த இருவரும் தற்பொழுது சண்டையிட்டு கொள்வது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
