Sujatha

நடிகை சுஜாதாவின் மரணத்தில் நீடித்திருக்கும் மர்மம், குடும்பமும் கணவரும் அவரது நிம்மதியான வாழ்க்கையை பழிவாங்கிய கதை இதுதான்

By admin on மார்கழி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 1970, 80களில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுஜாதா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் சுஜாதா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுஜாதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. 1952, டிசம்பர் 10ல் பிறந்தவர். அவரது தந்தை இலங்கை யாழ்பாணத்தில் இருந்த கல்லூரி ஒன்றில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்தார். அங்குதான் 10ம் வகுப்பு வரை சுஜாதா படித்தார். அதன்பின் அவரது 15வது வயதில் கேரளாவுக்கு குடிபெயர்ந்தனர். தையல் பயிற்சி பெற்று வந்த சுஜாதா, போலீஸ் ஸ்டேஷன் என்ற மலையாள நாடகத்தில் நடித்து, பின் மலையாள படம் ஒன்றில் அறிமுகமானார்.

Sujatha

#image_title

தமிழில், 1977ல், கே பாலசந்தர் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை படத்தில் சுஜாதா அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் பலத்த வரவேற்பை பெற்றார். பின் தமிழ், தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆண்டுக்கு 12 படங்களில் நடிக்கும் அளவுக்கு சுஜாதா பிஸியாக மாறினார். அவரது கால்ஷீட், சம்பளம் சார்ந்த விஷயங்களை சுஜாதாவின் சகோதரர்தான் கவனித்துக்கொண்டார். ஒரு கட்டத்தின் தனது குடும்பம் தன்னை ஒரு பணம் சம்பாதித்து வரும் இயந்திரமாக பயன்படுத்திக்கொண்டு இருப்பதை சுஜாதா தெரிந்துக்கொண்டார்.

   
   
Sujatha

#image_title

 

இந்நிலையில் தன் மீது அன்பு காட்டிய ஜெய்கர் என்பவரை சுஜாதா திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா டாக்டராக உள்ளார். இந்த சூழலில் ஒரு கட்டத்தில் சுஜாதாவை அதிக படங்களில் நடிக்குமாறு, கணவர் ஜெய்கர் கட்டாயப் படுத்தினார். பொது இடங்களுக்குச் செல்ல, டிவி, பத்திரிகைகளுக்கு சுஜாதா பேட்டியளிக்க அவர் தடை விதித்தார். கடைசியாக அவர் நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த போது, அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகை மனோரமாவுடன் இருந்தார். அப்போதும் அவர் பத்திரிகைகளுக்கு, டிவிக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.

Sujatha

#image_title

1990ம் ஆண்டில் வரலாறு படத்தில் அஜீத்குமாருக்கு அம்மாவாக நடித்த சுஜாதா அதற்கு பின் படங்களில் நடிக்கவில்லை. அவரை பற்றிய தகவல்களும் இல்லை. இந்நிலையில் கடந்த 2011ல், ஏப்ரல் 24ல் சுஜாதா மாரடைப்பால் காலமானார் என்ற தகவல் வந்தது. அவருக்கு நடிகர் கமல், கே பாலசந்தர் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது வாழ்க்கை முழுவதும் சோகங்களே நிறைந்திருந்தது. அவரது மறைவிலும் மர்மமே நீடித்து இருந்தது. சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த வெற்றி நாயகியாக சுஜாதா இருந்தும், அவரது வாழ்க்கை சோகம் நிறைந்த கதையாகவே முடிந்து போனது.