இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா?.. இங்கு ஒரு வீடுகளில் கூட சமையலறையே இல்லையாம்… வியக்க வைக்கும் உண்மை தகவல்…!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

ஒரு வீட்டின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று, சமையலறை. சமைப்பதை விரும்பும் பெண்கள், தங்கள் சமையலறையை, தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள சந்தன்கி என்கிற கிராமத்தில், ஒரு வீட்டில் கூட சமையலறை இல்லையாம்…! இந்த கிராமத்தில் உள்ள மக்கள், தங்கள் சொந்த வீடுகளில் உணவு சமைக்காமல், சமூக உணவுக்காக ஒன்று கூடுகின்றன. அவர்கள் ஒன்றாக அமர்ந்து, பல்வேறு குஜராத்தி பாரம்பரிய உணவுகளை, ஒரே இடத்திற்கு வந்து சாப்பிடும் முறையை பின்பற்றுகின்றனர். இதற்கு காரணம், கிராமத்தில் உள்ள இளைய தலைமுறை வேலைக்காக வெளியூருக்கு செல்வதால், இந்த கிராமத்தில் பெரும்பாலும் 55 முதல் 85 வயதுக்குட்பட்ட வயதான மக்களே உள்ளன.

   

இந்த கிராமத்தில் 1100 குடியிருப்பாளர்கள் இருந்த நிலையில், தற்போது 500 பேர் மட்டுமே உள்ளன. இங்குள்ள வயதான பெண்கள் நோய்களால் சிரமப்படுவதால், அங்குள்ள கிராம இளைஞர்கள், சமையலாட்களை வைத்து சமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். 35 – 40 கிராமவாசிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும் ஏசி சமூகக்கூடம் அமைக்கப்பட்டு, அதில் உணவு வழங்கப்படுகிறது.