அமைச்சரவையில் திடீர் அதிரடி மாற்றம்?… ‘அம்மா’ பாணியை கையில் எடுக்கிறாரா முதன்மையானவர்?…. உள்கட்சி புகார்களுக்கு நடுவே சூசகமாக வெடித்த ஆதங்கம்…!

Spread the love

“யாராவது லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள்” என்று மக்களிடம் நேரடியாக முழக்கமிட்டிருக்கிறார் முதன்மையானவர். தங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே “கொஞ்ச காலத்திற்காவது அனைவரும் தங்களின் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு நேர்மையாக இருக்க வேண்டும்” எனத் தன் சகாக்களுக்கு அவர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது அரசவை பிரதானிகளையே அவரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் தற்போதைய கள நிலவரம். முதன்மையானவரின் அறிவுரைகளை மீறி, அவரது சக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வரும் புகார்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அவர் தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், ‘பெருத்த’ எதிர்பார்ப்புகளுடன் மாற்றுப் கட்சிகளில் இருந்து வந்து தஞ்சம் புகுந்திருக்கும் புதியவர்கள், கட்சிக்குள் தங்களுக்கு எனத் தனி லாபியை (குழுவை) உருவாக்கத் தொடங்கிவிட்டனர். ‘அம்மா’ பாணியில் அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்ற பேச்சு பரவலாக இருப்பதால், மந்திரி பதவியைக் குறிவைத்து ‘வசந்தம் தேடி’ வந்தவர்கள் பகற்கனவில் மிதக்கிறார்கள். அதேநேரம், அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் கசிந்ததால், தற்போது பதவியில் இருக்கும் சிட்டிங் மந்திரிகள் சிலர் தங்களின் துறை சார்ந்த பணிகளில் அவசர அவசரமாகச் ‘சிந்திக்க’ (லாபம் பார்க்க) ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உள்கட்சி அரசியல் குழப்பங்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் முன்கூட்டியே கணித்துத்தான், முதன்மையானவர் பொதுவெளியில் “யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள்” என்று சூசகமாகத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் போலிருக்கிறது.

Nanthini

Recent Posts

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

6 minutes ago

பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…

16 minutes ago

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

32 minutes ago

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…

1 மணத்தியாலம் ago