1 மணி நேரத்திற்கு ₹2300..! அமெரிக்காவில் தையல் தொழிலுக்கு இவ்வளவு மாரியாதையா..? இந்தியப் பெண் வெளியிட்ட ஷாக் தகவல்..!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

அமெரிக்காவில் தையல் மற்றும் உடைகளை மாற்றியமைக்கும் தொழில் மிகவும் மரியாதைக்குரியதாகவும், அதிக லாபம் தரும் தொழிலாகவும் கருதப்படுகிறது. அங்கு வாழும் கோமல் பாண்டே என்ற இந்தியப் பெண் பகிர்ந்துள்ள வைரல் வீடியோவில், அமெரிக்காவில் தையல் கலைஞர்களுக்கு இருக்கும் பிரம்மாண்டமான வருமான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார். இந்தியாவில் தையல் தொழில் மூலம் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுபவர்கள், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இத்தகைய சிறந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு திறமையான தையற்கலைஞருக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 25 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹2,200 முதல் ₹2,300 வரை) வரை கூலியாகக் கிடைக்கிறது. இந்தியாவில் பலர் நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் தொகையை, அங்குள்ள தையல்காரர்கள் ஒரே ஒரு மணி நேரத்தில் ஈட்டிவிடுகிறார்கள். மேலும், ஒரு ஜீன்ஸ் பேண்ட்டின் நீளத்தைக் குறைப்பது போன்ற சிறிய அளவிலான ஆல்டரேஷன் வேலைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களிடம் இருந்து 40 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

   

https://www.instagram.com/reel/DZJ5dsFhald/?utm_source=ig_web_button_share_sheet

   

அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் ஆயத்த ஆடைகளையே வாங்குகிறார்கள். ஆனால், அவை அனைவருக்கும் கச்சிதமாகப் பொருந்துவதில்லை என்பதால், உடைகளைத் தங்களுக்கு ஏற்றவாறு ஆல்டரேஷன் செய்ய தையல்காரர்களைத் தேடிச் செல்கின்றனர். இதனால் அங்கு தையல் கலைஞர்களுக்கு எப்போதுமே தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தையல் மற்றும் ஆடை வடிவமைப்பில் நல்ல அனுபவமும் திறமையும் உள்ளவர்கள் அமெரிக்காவில் வெறும் வேலைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், சொந்தமாகத் தையல் கடையோ அல்லது ஆல்டரேஷன் சென்டரோ தொடங்கி மிகச்சிறந்த முறையில் முன்னேற முடியும் என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.