விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவும் CM நாற்காலிக்கு ஸ்கெட்ச்…? நற்பணி மன்ற கூட்டத்தில் கசிந்த ரகசியம்…! தமிழக அரசியலில் அடுத்த புயல்…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் எப்போதும் சினிமா நட்சத்திரங்களின் வருகையால் புதிய திருப்பங்களைச் சந்திப்பது வழக்கம். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு, ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் களத்தில் சாதித்துக் காட்டியதைத் தொடர்ந்து, அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

   

இந்தச் சூழ்நிலையில், பல வருடங்களாக ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மற்றும் நற்பணி இயக்கங்கள் மூலம் தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா, விரைவில் அரசியலில் தடம் பதிக்கப் போகிறார் என்ற தகவல் பட்டிதொட்டியெங்கும் தீயாய் பரவி வருகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய பேச்சுதான் தற்போது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

   

அக்கூட்டத்தில் பேசிய அந்த நிர்வாகி, “இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் முகங்களைப் பார்க்கும்போது எனக்கு பல எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் தெரிகிறார்கள். காலமும் கடவுளும் நினைத்துவிட்டால் இது கண்டிப்பாக நடக்கும். சூர்யா நற்பணி மன்றம் என்கிற ஒரு அடி உயரமுள்ள இந்த மூங்கில், விரைவில் 130 அடி உயரத்திற்கு வளரும். சூர்யா அண்ணனுக்காக நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, எதையும் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் துடுப்பு போட்டால்தான் படகு முன்னோக்கிச் செல்லும்” என உணர்ச்சிபொங்கப் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக வைரலாகி வருகிறது.

 

நிர்வாகியின் இந்த அதிரடிப் பேச்சு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இணையத்தில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன. சூர்யாவின் அனுமதியோடுதான் அந்த நிர்வாகி இப்படிப் பேசினாரா அல்லது ரசிகர்களின் தன்னிச்சையான ஆசையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ வெளியிடப்படாததால், சூர்யாவின் அரசியல் வருகை குறித்த சலசலப்பும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.