Connect with us

‘சூப்பர் சிங்கர்’ ஆதித்யாவின் அம்மா இந்த பிரபலமா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

CINEMA

‘சூப்பர் சிங்கர்’ ஆதித்யாவின் அம்மா இந்த பிரபலமா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் கலந்துகொண்டு பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் ஆதித்தயா. இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு கிட்டார் ப்ளேயரும் கூட. இவர் இன்ஸ்டாகிராமில் பல பாடல்களை அவரது ஸ்டைலில் பாடி அசத்துவார். கமலின் உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை ஆல்பமாக வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவரது இந்த ஆல்பத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பகிர்ந்து இருந்தார்.

மேலும் இவர் பாடல் எழுதுவது, மியூசிக் கம்போஸ் செய்வது என பல திறமைகளை கொண்டுள்ளார். தற்போது ஆதித்யா அவர்களுக்கு படத்தில் பாடும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகவுள்ள டான் படத்தில் “பே” Bae என்ற பாடலை பாடினார். இது வேற வெவல் டிரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து ஆதித்யா அமோர் என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

   

 

பாடகராக இருந்து தற்போது நடிகராக தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளார். இவரைத் தெரிந்த அளவிற்கு பலருக்கு இவரது அம்மாவை தெரிய வாய்ப்பில்லை. அவர் வேறு யாருமில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை, குணசித்திர வேடங்கள் என திரைத்துறையில் கலக்கிய மீரா கிருஷ்ணனின் மகன் தான் ஆதித்தயா. மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மீரா கிருஷ்ணன் நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல பாடகர், பல பக்திப் பாடல்கள் பாடி கேசட்டுகளை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் சிறந்த வீணை கலைஞரும் கூட. தனது யூடியூப் பக்கத்தில் பாடல்களை வீணையில் இசையாக வாசித்து பலரின் மனங்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது சிங்கர் ஆதித்யா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top