
CINEMA
KGF படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்த கருடாவுக்கு இப்படி ஒரு அழகான குடும்பமா?… வைரலாகும் கியூட் குடும்ப புகைப்படங்கள்…
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான்.இந்த கே ஜி எப் திரைப்படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து வெளியான கே ஜி எஃப் 2 படம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருந்தார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக வெளிவந்தது
விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார் இயக்குனர். முதல் நாளிலேயே கேஜிஎப் 2 படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
‘கேஜிஎப்’ -1 திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமச்சந்திர ராஜு. இவர் கருடா என்ற கேரக்டரில் இந்த படத்தில் நடித்ததால் அவரை ரசிகர்கள் கருடா என்று அவரை அழைத்து வருகின்றனர். கார்த்தி நடித்த ’சுல்தான்’ விஜய் ஆண்டனி நடித்த ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்த ராமச்சந்திர ராஜு கடந்த ஆண்டு வெளியான அருண் விஜய்யின் ’யானை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
தற்போது அவர் ’ஜன கன மன’ என்ற தமிழ் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராமச்சந்திர ராஜு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனது.