SmartWatch உண்மையிலேயே மனித உடல் செயல்பாடுகளை துல்லியமாக கணிக்கிறதா…? மருத்துவர்களின் ரிப்போர்ட் இதோ…

Spread the love

மக்கள் அனைவருக்கும் உடை உடுத்துவது மேக்கப் போடுவது போல வாட்ச் ஆகிவிட்டது. முந்தைய காலத்தில் மணி பார்ப்பதற்கு மட்டும்தான் வாட்ச் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது இந்த வாட்சில் அனைத்து அம்சங்களுமே இருக்கிறது. Smartwatch என்ற பெயரில் போன் செய்வது மெஸ்சேஜ் செய்வது உடலின் செயல்பாடுகளை கணிப்பது போன்ற பல அம்சங்களை கொண்டு வருகிறது. வாட்ச்சையும் தாண்டி மோதிர வடிவில் கூட இந்த ஸ்மார்ட் மோதிரங்கள் வந்துவிட்டது. மனிதர்களுக்கு பின்னால் ஏற்படக்கூடிய உடல் சார்ந்த பிரச்சினைகளை முன்னமே இது அறிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையா? இதனால் உண்மையிலே நன்மை ஏற்படுகிறதா? இது ஆக்கபூர்வமான கருவி தானா என்பதை மருத்துவர்கள் ஒரு ஆய்வில் கண்டறிந்து கூறியுள்ளனர். அதை பற்றி இனி காண்போம்.

இந்த Smartwatch இல் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் நோக்கமானது மருத்துவம் சார்ந்த கருத்துகணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதாக இருக்கிறது. பல பிரீமியமான Smartwatch தயாரிப்புகள் உடற்பயிற்சி நடைமுறைகள் உடலின் வெப்பநிலை இதயத்துடிப்பு மாதவிடாய் சுழற்சி தூக்கம் போன்றவற்றை துல்லியமாக கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றன.

பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை பொது சுகாதார அமைப்பின் இலட்சக்கணக்கான நோயாளிகளுக்கு Smartwatch போன்ற மின்னணுக் கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அறிவிக்க உள்ளதாக இருக்கிறது. அவர்கள் நடத்திய ஆய்வில் உண்மையிலேயே இந்த Smartwatch எனப்படும் மின்னணு கருவிகள் பல உடலின் செயல்பாடுகளை முன்னமே கணித்து எச்சரிப்பதாக கூறுகின்றனர். இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட ஒரு நபர் தனது உடலில் பிரச்சினையை ஏற்படுவதற்கான இரண்டு நாட்களுக்கு முன்பே உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை அது எச்சரித்ததாம். அது எச்சரித்து இரண்டு நாட்களுக்கு பிறகு வயிற்று வலியால் அவருக்கு ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாம். அதனால் இது பயனுள்ளது தான் என்று கூறியிருக்கிறார்.

அதனால் இந்த மருத்துவ சம்பந்தமான உடல்நிலை பயன்பாட்டில் மருத்துவ தரவுகளை இந்த Smartwatch துல்லியமாக கணிக்கின்றன. இது முன்னெச்சரிக்கையாக மனித உடலின் ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார் இந்த மின்னணு கருவியான Smartwatch பயனுள்ளதாக இருக்கும் என்பதை அனைத்து நேரங்களிலும் நாம் கணக்கிட முடியாது.

முக்கியமான நேரங்களில் இது கை கொடுக்காமல் இருந்திருக்கிறது. சில நேரங்களில் அசாதாரண தரவுகளை இது வழங்குகிறது. இதற்கு அதுனுள் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக கூட நடக்கும். அதனால் இதை முழுமையாக நம்பவே முடியாது. இதை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒரு சில எச்சரிக்கைகளை இது தருவதால் இதன் மூலம் மக்கள் விழிப்படைந்து மருத்துவர்களை அணுகவோ தங்களை பரிசோதித்து கொள்ளவோ செய்கிறார்கள். அதனால் இந்த Smartwatch களை பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

விஜய் – அன்புமணி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?…. தவெக அமைச்சரவையில் பாமக…. கொதித்தெழும் திருமா…. அதிரும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை…

2 minutes ago

திக் திக் திக்… நடுரோட்டில் நில வியாபாரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு… பீகாரில் நடந்த கொடூரம்… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…

3 minutes ago

ஐயோ ஐயோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்… குழந்தையைக் கையில் வைத்திருந்த தந்தை மீது பாய்ந்த காளை… பதற வைக்கும் CCTV காட்சி…!!

ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…

24 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… சாட்சியமளிக்க வந்த பெண்… நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…

34 minutes ago

அட கொடுமையே… வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்… சலூன் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…

54 minutes ago