பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது மாற்றப்பட உள்ள முக்கியமான ஹீரோயின் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மக்களை குறிப்பாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஹிட் ஆக ஓடிக் கொண்டுள்ளது. நான்கு அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையையும், பாசத்தையும், கூட்டுக் குடும்பத்தின் அழகை பற்றியும் இந்த சீரியல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், அன்பு, காதல், பிரச்சினை, ஒற்றுமை என அனைத்தையும் ஒருங்கே காட்டுகிறது. நிஜத்தில் இப்படி ஒரு கூட்டு குடும்பம் இருப்பது சாத்தியமில்லாத ஒன்றே. எனவே மக்கள் இந்த சீரியலை பார்த்து இவ்வளவா அழகான கூட்டுக் குடும்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரசித்து வருகின்றனர்.

இத்தொடரில் தற்பொழுது மூர்த்தி தனம் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து பல நடிகர்கள் நடிகைகள் மாற்றம் இந்த சீரியலில் நடந்துள்ளது. குறிப்பாக முல்லை கதாபாத்திரம் முதலில் சித்ரா முல்லையாக நடித்தார். அவர் இறப்பை தொடர்ந்து காவியா அறிவுமணி கதாபாத்திரத்தை அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவரும் தற்பொழுது விலக தற்பொழுது வேறு ஒரு நடிகை முல்லையாக நடித்துக் கொண்டு வருகிறார். ஐஸ்வர்யா கதாபாத்திரம், ஜனார்த்தனன் கதாபாத்திரம் என நிறைய நடிகர்கள் மாற்றங்கள் இந்த சீரியலில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது மீனாவின் தங்கையாக நடித்த ஸ்வேதா கதாபாத்திரம் மாற்றம் அடைந்துள்ளது. புதிய ஐஸ்வர்யாவாக களமிறங்க போகும் நடிகையை பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அவரது புகைப்படம்….

