1960-களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.
கவுண்டமணியின் பாணியைதான் தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருமே ஃபாலோ பண்ணி வருகின்றனர். இடையில் ஆர் சுந்தர்ராஜன் நடிக்க வந்தபோதும் இதே போல கவுண்டமண்யின் ஸ்டைலை அவர் ஃபாலோ செயவதாக விமர்சனங்கள் எழுந்தன.

#image_title
ஆர் சுந்தர்ராஜன் தன்னுடைய தனித்துவமான படங்களுக்காகக் கொண்டாடப்பட்டவர். ஆனால் 90 களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த போது அவர் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார். கோயம்புத்தூர் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, மணிவண்ணன் போல அவர் நக்கல் நய்யாண்டி தூக்கலான ஒரு நகைச்சுவை நடிகராக வந்தபோதுதான் அவர் கவுண்டமணியை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் கரு பழனியப்பன் “சுந்தர்ராஜனின் ஆரம்ப கால படங்களில்தான் கவுண்டமணி கவனம் பெற்றார். அவர் நடித்த சில படங்களைப் பார்த்தால் அது அப்படியே ஆர் சுந்தர்ராஜனின் மாடுலேஷனில் கவுண்டமணி பேசியிருப்பார். ஆனால் ஆர் சுந்தர்ராஜன் நடிக்க வந்தபோது அவர் கவுண்டமணியைக் காப்பி அடிக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் உண்மை இதுதான்” எனக் கூறியுள்ளார்.
