மம்மூட்டிக்குப் பெருங்குடல் புற்றுநோயா?… அவரது நண்பர் வெளியிட்ட பதிவு!

By vinoth on பங்குனி 26, 2025

Spread the love

மலையாள சினிமாவின் கொடுமுடிகளாக கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாகக் கொடுத்த மம்மூட்டி தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அவரின் ப்ரமயுகம் படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கிவருகிறது.

தற்போது 73 வயதானாலும் கொஞ்சம் கூட அசராமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. இதுவரை 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இப்போதும் வருடத்துக்கு 5 படங்கள் அளவுக்கு நடிக்கிறார்.

   

தமிழ் தாண்டி பிறமொழிகளில் மம்மூட்டி நடிக்கிறார். தமிழில் அவர் அழகன், தளபதி, ஆனந்தம் மற்றும் பேரன்பு என தரமான படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை மம்மூட்டியின் மக்கள் தொடர்பாளர் மறுத்தார். ஆனால் அவருக்கு சிறு உடல்நலப் பிரச்சனை என அவரின் சகநடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார்.

   

 

இந்நிலையில் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தம்பி ஆண்டனி அவருக்குப் பெருங்குடல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் முகநூல் பதிவில் “ 50 வயதைத் தாண்டிய அனைவரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலன்கோபி சோதனை செய்துகொள்ள வேண்டும்.  அதன் மூலம் பெருங்குடல் புற்ற்நோயைக் கண்டுபிடிக்கலாம். அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு மூலமாக இதைக் குணப்படுத்தலாம். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலரும் அதன் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். நமது மம்மூக்காவும் சிகிச்சைப் பெற்று மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.” எனக் கூறியுள்ளார். தற்போது சென்னை மருத்துவமனையில் இருக்கும் மம்மூட்டி விரைவில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது.