தமிழ் சினிமாவில் நடிகை ஷாலினியின் தம்பி என்ற அடையாளத்துடனும், வளர்ந்து வரும் இளம் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ரிச்சர்ட். இவர் நடிகர் அஜித்தின் மச்சான் என்பதும் அனைவரும் அறிந்ததே. 2002ல் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதல் வைரஸ் படத்திலிருந்து நாயகனாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான இன்னும் சில படங்களும் சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை .இவர் தற்பொழுது நடிகை யாஷிகா ஆனந்த் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரிச்சர்டின் சோகமான காதல் கதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் பிரபல பாடகரின் மகளான கண்ணதாசனின் மகள் சத்யலட்சுமியை காதலித்துள்ளார். ஜாதி, மதம் பார்க்காமல் இத்திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒப்புதல் கூறவே பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தை நடிகர் அஜித்தே முன் நின்று நடத்தியுள்ளார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது.

இதை தொடர்ந்து 45 வயதான இவர் தற்பொழுது வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். தற்பொழுது தான் இவர் நடிகை யாஷிகா ஆனந்தை காதலித்து வருவதாக புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் நடிகர் அஜித்தின் மச்சானுக்குள் இப்படி ஒரு சோகமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

