
CINEMA
தனது உயிர் நண்பனுடன் 6 மாதம் பேசாமல் இருந்த நடிகர் விஜய்… தளபதி இவ்ளோ பெரிய கோபக்காரரா?…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி என்று இவரது ரசிகர்கள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தற்பொழுது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். திரைப்படத்தில் நடிகை திரிஷா இவருக்கு ஜோடியாக நடித்து வருவதும் நாம் அறிந்ததே.
கில்லி திரைப்படத்திற்கு பிறகு லியோ திரைப்படத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது ஜோடி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரிதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய்க்கு நண்பர்கள் வட்டாரம் மிகக்குறைவு தான். தனது கல்லூரி கால நண்பர்களுடன் மட்டும் தான் தற்பொழுது தொடர்பில் உள்ளார் நடிகர் விஜய். அப்படி நடிகர் விஜயின் நண்பராக நீண்ட காலம் இருந்து வருபவர் நடிகர் சஞ்சீவ்.
இவருடன் விஜய் ஒருமுறை சண்டை போட்டு 6 மாதம் வரை பேசாமல் இருந்தாராம். இதற்கு காரணம் விஜயன் நண்பர்கள் எல்லோரும் பங்கேற்ற ஒரு ஷோ நடத்தப்பட்ட பொழுது நடிகர் சஞ்சீவ் மட்டும் அதில் கலந்து கொள்ள வில்லையாம். அவர் திருமதி செல்வம் ஷூட்டிங்கில் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜய் அவரிடம் 6 மாதத்திற்கு பேசவில்லை என்று கூறப்படுகிறது.