ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலிலேயே அணிவகுத்து நிற்கின்றன.
இதில் சென்னை துறைமுகத்திற்கு வரவேண்டிய இரண்டு பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல்களும் சிக்கியுள்ளதால், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் சென்னை உள்ளிட்ட 12 இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து மற்றும் கன்டெய்னர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவில் அடுத்த 8 வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற இந்திய அரசு திட்டமிட்டு வருவதால், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை எனத் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…