“ஜல்லிக்கட்டு நாயகி To திமுக மேடை”… விஜயை வறுத்தெடுக்கப் போகும் வீரத் தமிழச்சி… திமுக மேடையில் பிக்பாஸ் ஜூலி… 2026 தேர்தலில் தளபதிக்கு காத்திருக்கும் செக்..!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது விஜய்க்கு எதிராகத் தனது குரலைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி, அண்மைக் காலமாக விஜய்யின் அரசியல் பேச்சுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.

சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் விஜய் பேசிய ஜல்லிக்கட்டு தொடர்பான குட்டிக்கதை ஒன்றைத் தான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. காளையைச் சமாதானப்படுத்த புல்லுக்கட்டு கொடுத்த சிறுவனைப் பற்றி விஜய் குறிப்பிட்ட கருத்தை விமர்சித்த ஜூலி, இது போன்ற பேச்சுகள் ஆபத்தானவை என்றும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வீரியத்தைக் குறைப்பதாகவும் தெரிவித்தார். இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஜூலியைச் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடி வருவதோடு, அவருக்கு மிரட்டல்களையும் விடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலி வெளியிட்ட வீடியோவில், “உங்களுக்கு தைரியமிருந்தால் நான் இருக்கும் இடத்திற்கு வந்து பேசுங்கள்; நீங்கள் பனையூரை விட்டு வெளியே வரமாட்டீர்கள், நானே வருகிறேன்” என விஜய்யின் ரசிகர்களுக்கு நேரடியாகச் சவால் விடுத்துள்ளார். இந்த மோதல் ஒருபுறம் இருக்க, ஜூலி இப்போது திமுகவின் அரசியல் மேடைகளில் தென்படத் தொடங்கியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திமுக நடத்திய ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியது, அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் அல்லது அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் இந்தத் திட்டம் விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு வியூகமாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. விஜய்க்கு எதிராகப் பேசும் ஒரு பெண்ணை முன்னிறுத்துவதன் மூலம் இளைய தலைமுறை மற்றும் பெண்களின் கவனத்தை ஈர்க்க திமுக முயல்வதாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் திமுகவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜூலி விஜய்க்கு எதிராக மேலும் பல அதிரடி விமர்சனங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2026 தேர்தலில் திமுகவிற்கும் விஜய்யின் கட்சிக்கும் இடையிலான போட்டி ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago