சினிமாவில் தன் வாரிசாக இவரை அறிவித்தாரா MGR…? இது தெரியாம போச்சே…

By admin on புரட்டாதி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் MGR. ஆக்சன் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் போன்றவை இவரது படங்களில் பெரும்பாலாக இருக்கும். 1950 60 70களில் மிகப் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் MGR.

   

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திராவிட சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட MGR, திராவிட கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவரே தனியாக கட்சி தொடங்கி நடத்தினார். இதற்கு அவரது ரசிகர்களும் காரணம். MGRக்கு இருந்த ரசிகர்களை பக்தர்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவர் மீது தமிழக மக்கள் பாசம் வைத்திருந்தனர்.

   

அப்படி MGR முதலமைச்சரான பிறகு 1980களில் தான் ரஜினி, கமல், ராமராஜன், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ் போன்றோர் வளரும் நடிகர்களாக இருந்து வந்தனர். இவர்களுள் MGR அவர்களுக்கு மிகவும் பிடித்தது பாக்யராஜ் அவர்கள் தானாம்.

 

கே பாக்யராஜ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத்தை கொண்டவர். அதனால் இவர் மீது MGRக்கு தனி ஈர்ப்பு உள்ளதாம். இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் MGRக்கு மிகவும் பிடித்ததாம். இவரை அதற்காக நேரில் கூப்பிட்டு வெகுவாக பாராட்டி இருக்கிறார் MGR. இத்தனை திறமையான கே பாக்யராஜ் தான் சினிமாவில் எனது வாரிசாக இருக்க வேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் கூட MGR கூறியிருக்கிறாராம்.