பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டி கொண்டாடுவது தான் இன்றைய ட்ரெண்ட். ஆனால் இன்றும் கிராமப்புற மக்கள் ஏழ்மையின் பிடியில் இருக்கும் மக்கள் ஒரு நல்ல தரமான கேக்கை சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த ஒரு சிந்தனையை மாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் OCB கேக்ஸ்.
ஆஷிஷ் ரஞ்சன் மற்றும் பொத்திசன் பிட்டு ஆசியோரால் நிறுவப்பட்டது பாட்னாவை தளமாக கொண்ட பீகாரை கலக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் கேக் பிஜோ எனப்படும் OCB கேக்ஸ். இந்த பிராண்ட் சமூக தொடக்கமாகவும் மாறியுள்ளது மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் பல சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கிறது.
பீகாரை சேர்ந்த ஆஷிஷ் ரஞ்சன் குடும்ப சூழலின் காரணமாக பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குடும்ப வருமானத்திற்காக ஆஷிஷ் தனது கல்லூரி தோழியான புத்திசன் பிட்டு உடன் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வகுப்புகளை நடத்த தொடங்கினார். ஒரு சில வருடத்திற்கு பிறகு சமூகத்திற்கு ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியில் இருவரும் இறங்கினர்.
ஆஷிஷ் மற்றும் புத்திசன் ஆகியோருக்கு கேக்குகளின் மீது கவனம் சென்றது. பீகார் முழுவதும் உயர்தர கேக்குகளை வழங்குவதும் அதன் மூலம் தனிப் பயனாக்கும் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி 2018 ஆம் ஆண்டு OCB கேக்ஸ் உருவானது. வெறும் ₹20,000 மூலதனத்துடன் இந்த தொழிலை தொடங்கினார் ஆசிஷ்.
ஆன்லைன் கேக் பிஜோ ஆரம்பத்தில் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி இணையதளத்தை அடித்தளத்தில் இருந்து உருவாக்கியது. உள்ளூர் பேக்கரிகளுடன் கூட்டு சேர்ந்து விநியோக சங்கிலி உருவாக்கத் தொடங்கினர். இதன் மூலம் கேக்குகள் பேக்கரிகள் இருந்து பெறப்பட்டு ஆன்லைனில் விநியோகிக்கப்படும். ஆனால் கேக்குகளின் தரம் அந்த அளவுக்கு கூறும் அளவிற்கு இல்லை. அதனால் அதற்கு பிறகு ஆஷிஷ் தொழில்நுட்பத்தில் இருந்து தரத்துக்கு கவனம் செலுத்த தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஆஷிஷ் மற்றும் புத்திசன் கேக்குகளை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அவர்களே சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தனர். சமையல்காரர்களை நியமித்து உயர்தர தனிபயனாக்கப்பட்ட கேக்குகளை வெறும் ஆயிரம் ரூபாயிலிருந்து வழங்க தொடங்கினர். ஆசிஷ் தனது மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்ய தொடங்கினார். அடுத்த கட்டமாக கேக்குக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை உள்நாட்டின் மூலமும் பதப்படுத்தப்பட்டதை விட புதியதை தேர்ந்தெடுக்கலாம் என்று சிந்தித்தனர்.
ஆஷிஷ் தனது ஆன்லைன் கேக் பிஜோவை மதிப்பு கூட்டப்பட்ட சத்தான பொருட்களில் செய்யப்பட்ட புதுமையான கேக்குகள் வேண்டும் என்று நினைத்தார். இந்த சிந்தனை அவரை இன்னும் அடுத்த கட்டிற்கு எடுத்து சென்று ஆஷிசை விவசாயத்திற்கு திருப்பியது. உள்ளூர் விவசாயிகளுக்கு கோதுமைக்கு பதிலாக திணை ஜோவர் மற்றும் ராகி வளர்க்க உதவி செய்ய ஆரம்பித்தார் ஆசிஸ்.
இந்த விவசாயிகளில் இருந்து பெறப்பட்ட சிறுதானியங்களை கொண்டு கிராமப்புற பெண்களால் திணை குக்கீஸ் மஃபின்கள் மற்றும் உலர் கேக் போன்றவற்றை தயாரிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு OCB ஆனது ஆன்லைன் கேக் மற்றும் டெசர்ட் டெலிவரி பிராண்டாக சமூகத்தின் புது தொடக்கமாகவும் மாறியது. வியாபாரம் மட்டுமல்லாமல் ஆஷிஷ் மற்றும் புத்திசன் கிராமப்புற பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்பு கண்டறிய உதவுவதற்காக பீகார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பல she குழுக்களை தொடங்கியுள்ளனர். அதற்கு பல்வேறு FPOக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு பிறகு OCB ஸ்டார்ட் அப் பாலக்கோடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 20 லட்ச ரூபாய் மானியம் பெற்றது. தற்போது ஆன்லைன் கேக் பிஜோ ஒரு பிரான்சிஸ் திட்டத்தை உருவாக்கி 8 உரிமையாளர்கள் கடையை கொண்டுள்ளது. இவர்கள் விற்பனைக்கு வைக்கும் பொருட்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தனிப்பயற்காக்கப்பட்ட கேக்குகள் ராகி குக்கிகள் ஆகியவை அடங்கும்.
ஆறு மாதங்களில் OCB ஒரு லட்சம் மட்டுமே வருவாய் இயற்றியுள்ளது. அதன் பிறகு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு தற்போது ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் பீகார் உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 உரிமையாளர் விற்பனை நிலையங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று கூறியிருக்கிறார் ஆசிஷ்.