இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவி தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்த விவரங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார் இவர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் உறவினர் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இதனை தொடர்ந்து கதாநாயகனாக கலக்கிய ஜி வி பிரகாஷ் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ,வாட்ச்மேன், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் பிரபல பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இவருக்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். அதாவது ‘சவுண்ட்ஸ் ரைட்’ என்ற பெயரில் ஒரு ரெகார்டிங் ஸ்டூடியோ ஒன்றை புதிதாக திறந்து உள்ளார். தற்பொழுது ஸ்டுடியோவின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சீன் ரோல்டன், ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் என திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்…

