இன்றைய காலகட்டத்தில் எல்லா உணவையும் ஆராய்ந்து தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லோரும் யோசிக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது முட்டை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறந்த புரதச்சத்து நிறைந்த உணவாக முட்டை கருதப்படுகிறது. ஆனால் தற்போது முட்டை கெட்ட கொழுப்பு உடைய உணவு, இதை ஒரு சில உபாதை இருப்பவர்கள் சாப்பிடவே கூடாது என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதைப்பற்றி இனி காண்போம்.
நம்மில் பலருக்கு அன்றாட உணவில் முட்டை ஒரு அங்கமாக இருக்கும். முட்டை மிகவும் சத்தான உணவாக நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வாங்கி உண்ணக்கூடியது தான் இந்த முட்டை. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் நோயாளிகள் முட்டை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
முட்டையின் வெள்ளை கருவில் கெட்ட கொழுப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவை தாராளமாக எல்லோரும் சாப்பிடலாம் முட்டையின் வெள்ளை கருவில் அதிகப்படியான புரதம் இருப்பதால் அது எந்த தீங்கும் விளைவிக்காது என்று கூறுகிறார்கள். ஆனால் நல்ல கொழுப்பாக கருதப்படும் முட்டையின் மஞ்சள் பகுதி உண்மையில் கெட்ட கொழுப்பு என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ரத்த கொழுப்பு இருப்பவர்கள், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்றுப்புண் அமிலத்தன்மை அல்லது அஜீரண பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் முட்டையை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முட்டையை சாப்பிடுவதால் பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும் எதையும் அளவாக சாப்பிட தான் வேண்டும். அதுவும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். இதய நோயாளிகள் ஒரு முட்டைக்கு மேலே கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. எடையை குறைக்க விரும்புவோரும் முட்டையை அளவாக தான் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…