Detox

Body Detox அவ்வளவு முக்கியமானதா…? Detox செய்யவில்லை என்றால் இத்தனை பாதிப்புகளா…?

By admin on ஆவணி 3, 2024

Spread the love

Body Detox என்ற வார்த்தை சமீப காலமாக பிரபலமான ஒன்றுதான். நம் வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது மற்றும் ஃபாஸ்ட் புட் வகைகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் ஃபாஸ்ட் புட் கடைகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்த ஃபாஸ்ட் புட்டுகள் பிரபலமடைந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த ஆரோக்கியமற்ற பாஸ்ட் புட் வகைகளை சாப்பிடுவது தான் ஸ்டைல் மற்றும் ட்ரெண்ட் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தான் அவளத்தின் உச்சம்.

   

Detox என்பது நம் உடம்பில் சேரும் கழிவுகளையும் நச்சுத்தன்மையும் வெளியேற்றும் ஒரு முறை ஆகும். நமக்கே தெரியாமல் நாம் சாப்பிடும் உணவுகளில் கலக்கும் ரசாயனங்களையும், ஃபாஸ்ட் ஃபுட் வகைகளால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு Body Detox அவசியமான ஒன்றாகும்.

   

என்னதான் நம் உடம்பு வியர்வை, சிறுநீர், மலம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்தாலும், ஒரு அளவிற்கு மேல் உடம்பில் நச்சுத்தன்மை கூடும்போது நம் உள்ளுறுப்புகள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் அதுவே பாதிப்பு உள்ளாகும். அந்த அளவுக்கு நம் உடம்பே தன்னால் வெளியேற்ற முடியாத அளவுக்கு இந்த ஃபாஸ்ட் புட் வகைகள் தரமற்றதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

 

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Detox செய்து வந்தனர். மூலிகை ரசம், மூலிகை சாறு, கசாயம், சுக்கு காபி, இஞ்சிச்சாறு, வேப்பிலைச் சாறு, நெல்லிக்காய் சாறு போன்றவற்றை வைத்து உடலை சுத்தம் செய்து கொண்டனர். நாமளும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Detox பானங்களை தயார் செய்து சாப்பிடலாம் அல்லது Detox செய்வதற்கான மூலிகை மாத்திரைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒருமுறை நம் உடம்பை Detox செய்து கொண்டால் உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கும். நம் உடம்பில் இருக்கும் கல்லீரல், கணையம், குடல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்படையாமலும் தடுக்கலாம். ஆகவே மாதத்திற்கு ஒரு முறை Body Detox செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.