பகத்பாசில், நஸ்ரியா முதல் அஜித் ஷாலினி வரை.. பெரிய வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்..!!

By admin on ஆவணி 3, 2024

Spread the love

பெரிய அளவிலான வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சிரஞ்சீவி-சுரேகா:
சிரஞ்சீவி தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார். சிரஞ்சீவி சுரேகா என்பவரை கடந்த 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆறு வயது வித்தியாசம் இருக்கிறது. சுமார் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

   

   

மம்முட்டி-சல்பத் குட்டி:
மம்முட்டி மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார். இவர் கடந்த 1979-ஆம் ஆண்டு சல்பத் குட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மம்மூட்டியை விட சல்பத் குட்டி 10 வயது இளையவர். இந்த தம்பதியினருக்கு துல்கர் சல்மான், சுருமினி என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் துல்கர் சல்மான் படங்களில் நடித்து வருகிறார்.

 

ரஜினிகாந்த்-லதா:
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் லதா என்பவரை கடந்த 1981-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்தை விட லதா 8 வயது இளையவர்.

ஆர்யா-சாயிஷா:
பிரபல ஹீரோவான ஆர்யா கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவை விட சாயிஷா 17 வயது இளையவர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

மகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய ஆர்யா-சாயிஷா..

அஜித்-ஷாலினி:
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஜித்தை விட ஷாலினி 8 வயது இளையவர்.

Shalini Shares Photo With Hubby Ajith From Hospital, Fans concerned

பகத் பாசில்-நஸ்ரியா:
பிரபல நடிகரான பகத் பாஸில் முன்னணி நடிகையாக இருந்த நஸ்ரியாவை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பகத் பாசிலை விட நஸ்ரியா 12 வயது இளையவர்.

12 வயது வித்தியாசம்... ஆனால் திருமணம் செய்தது ஏன்? நஸ்ரியா சொன்ன அந்த  வார்த்தை - மனிதன்