டால்பின் படை ரெடி…! அமெரிக்காவிற்கு ஈரான் கொடுக்கும் ‘வெடி’ அச்சுறுத்தல்…. கலக்கத்தில் டிரம்ப்…!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின் அபாரமான சோனார் திறனைப் பயன்படுத்தி, அவற்றின் முதுகில் வெடிமருந்துகளைப் பொருத்தி கடலடியில் தாக்குதல் நடத்த இந்த நூதன பிளான் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய பயிற்சி பெற்ற டால்பின்களை ஈரான் வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய குறைந்த செலவுடைய போர் முறையை அந்நாடு கையில் எடுத்துள்ளது.

டால்பின்கள் மட்டுமின்றி, கடலடியில் உள்ள தொலைத்தொடர்பு கேபிள்களைத் துண்டிப்பது மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவது போன்ற மிரட்டல்களையும் ஈரான் விடுத்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா அதிநவீன ‘சீ ட்ரோன்கள்’ மற்றும் தானியங்கி நீர்மூழ்கி வாகனங்கள் மூலம் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் இந்த ‘டால்பின் போர் தந்திரம்’ எந்தளவுக்குப் பலன் தரும் என்பது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.