மத்திய கிழக்கில் ‘யுக முடிவு’ ஆரம்பமா?… இஸ்ரேலின் அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் நிலைகுலைந்த ஈரானிய எரிசக்தி நிலையங்கள்… பதறவைக்கும் காட்சிகள்..!!!

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய சரமாரி வான்வழித் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில், தெஹ்ரானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டன.

இதனால் ஏற்பட்ட பயங்கர வெடிச்சம்பவங்களைத் தொடர்ந்து, விண்ணைத் முட்டும் அளவிற்கு ராட்சத நெருப்புக் கோளங்களும் கரும்புகையும் தெஹ்ரான் நகரையே சூழ்ந்தன. இந்தத் தாக்குதல் ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்டதாகவும், ஈரானிய ராணுவத்தின் செயல்பாடுகளை முடக்க இது அவசியமான நடவடிக்கை என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஹைஃபாவை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே லெபனான் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்தப் போர், தற்போது இரு நாடுகளின் பொருளாதார ஆதாரங்களான எண்ணெய் நிலையங்களை நேரடியாகத் தாக்குவதன் மூலம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல், உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் தங்களின் தாக்குதல்களைத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Rajeshwari

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

8 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

8 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

8 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

8 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

8 மணத்தியாலங்கள் ago