அசைக்க முடியாத அமெரிக்காவுக்கு அடி கொடுத்த ஈரான்… உலகையே அதிர வைத்த F-35 போர் விமானத் தாக்குதல்… போர் உச்சகட்டம்..!!!

By Rajeshwari on பங்குனி 20, 2026

Spread the love

அமெரிக்காவின் மிகவும் அதிநவீன மற்றும் ரேடார்களில் சிக்காத ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 ரக போர் விமானத்தை ஈரான் தாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஈரான் வான்பரப்பில் போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஈரானால் குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உள்ளான எஃப்-35 விமானம், பலத்த சேதத்துடன் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க மத்திய கட்டளையும் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், விமானி காயமின்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்நிலையில் உலகின் விலையுயர்ந்த மற்றும் அசைக்க முடியாத போர் இயந்திரமாகக் கருதப்படும் எஃப்-35 விமானத்தையே ஈரான் தாக்கியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதோடு, உலகளாவிய எரிபொருள் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.