மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. சமீபத்தில் 17 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘கைரோன் 7’ (Chiron 7) என்ற கெமிக்கல் டேங்கர் கப்பலை ஓமனின் ஷினாஸ் துறைமுகப் பகுதி அருகே ஈரான் கடலோரக் காவல் படை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு கடல்வழி முற்றுகையாக உருவெடுத்துள்ளதே இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுப்பதும், அதற்குப் பதிலடியாக அந்தப் பாதையில் வரும் பிற கப்பல்களை ஈரான் சிறைபிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் ‘சான்மார் ஹெரால்ட்’, ‘ஜக் அர்னவ்’ மற்றும் ‘யுபோரியா’ உள்ளிட்ட பல கப்பல்கள் ஈரானியப் படைகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருவது இந்தியாவிற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் குழப்பம் நிலவுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்தப் பதற்றமான சூழலால், ஆயிரக்கணக்கான மாலுமிகளுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்தப் பாதையைத் திறப்பதாக அறிவிப்பதும், சில மணி நேரங்களிலேயே மீண்டும் மூடுவதுமாக ஈரான் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளையும் கப்பல்களையும் மீட்க மத்திய அரசு தீவிர தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக இதுவரை 10 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. இருப்பினும், இன்னும் 14 கப்பல்கள் அங்கே சிக்கியுள்ள நிலையில், அவற்றை விரைவாக மீட்கவும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப்…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு,…
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…