ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்த நிலையில், இந்தியா, சீனா, கத்தார் மற்றும் ஈராக் ஆகிய 4 நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் விதிவிலக்காக அனுமதி அளித்துள்ளது. இந்த திடீர் முடிவின் பின்னணியில் ஒவ்வொரு நாட்டுடனும் ஈரானுக்கு உள்ள வலுவான வர்த்தகம், அரசியல் ஆதரவு மற்றும் பொருளாதாரத் தேவைகளே முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் அந்நாட்டில் கடுமையான மருந்து மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுகிறது. சர்வதேச அளவில் முன்னணி மருந்து தயாரிப்பு மையமாகத் திகழும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைத் தடையின்றிப் பெற முடியும் என ஈரான் கணக்கிட்டுள்ளது.
சீனாவுடனான உறவில் பொருளாதாரப் பலன் பிரதானமாக உள்ளது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் சீனாவிற்கு தான் செல்கிறது; தடைகளையும் மீறி சீனாவிற்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரான் தன் பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. அதேபோல் கத்தார் நாடு, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்களில் முக்கியமான மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருவதால் கத்தார் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கைப் பொறுத்தமட்டில், இரு நாடுகளுமே ஷியா இஸ்லாமியப் பெரும்பான்மையைக் கொண்டவை என்பதால் இயல்பான மத மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. மேலும், ஈராக்கின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் குழுக்களுக்கு ஈரான் வழங்கி வரும் ஆதரவை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவுகிறது. இத்தகைய தனியுரிமைச் சலுகைகளின் மூலம் ஈரான் தன் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, தனக்கான அரசியல் ஆதரவையும் உறுதி செய்து கொள்கிறது.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம், சுமார் 300 மீட்டர் தொலைவில் நடைபயிற்சி…
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கலேபூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா பொருட்காட்சியில், கடல் கன்னி போன்ற வேடமணிந்து…
அரசு அலுவலகங்களில் தங்களது பணிகள் தடையின்றி முடிவதற்காகப் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 25…
சியாட்டில் உள்ள 'லுமென் ஃபீல்டு' மைதானத்தில் சியாட்டில் சீஹாக்ஸ் மற்றும் சிகாகோ பியர்ஸ் அணிகளுக்கு இடையேயான என்.எஃப்.எல் கால்பந்து போட்டிக்கு…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், தமிழக அரசுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறப்…