ஏம்மா யாரு நீ…? நள்ளிரவு 2 மணிக்கு வெள்ளை தாளில் டிக்கெட் எழுதிய போலி பெண் TTE… பயணிகளை மிரட்டி மாஸ்க் அணிந்து தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம்… பரபரப்பு…!!

Spread the love

மகாராஷ்டிராவில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவு 2 மணிக்கு பெண் ஒருவர் தான் டிக்கெட் பரிசோதகர் எனக் கூறிக்கொண்டு, வெள்ளைத் தாளில் டிக்கெட் எழுதிப் பணம் வசூலிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து பீகார் சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் சீருடை அணியாத பெண் ஒருவர் வந்து டிக்கெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளார். அப்போது டிக்கெட் இல்லாத ஒரு பயணிடம் தனது பையிலிருந்து ஒரு சாதாரண வெள்ளை காகிதத்தை எடுத்து அவரது பெயரை எழுதிப் அபராதத் தொகை வாங்க முயன்றுள்ளார்.

இதைக் கண்டு சந்தேகமடைந்த மற்ற பயணிகள், நள்ளிரவு நேரத்தில் சீருடை இல்லாமல் டிக்கெட் பரிசோதனை செய்யும் அந்தப் பெண்ணிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அட்டை காட்ட மறுத்த அப்பெண், ரயில்வே அதிகாரிகளிடம் மட்டுமே காட்டுவேன் எனக் கூறி நழுவ முயன்றுள்ளார்.

பயணிகள் அவரைத் தடுத்து நிறுத்தித் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பதற்றமடைந்த அப்பெண், தன் மீது தவறான முறையில் அத்துமீறுவதாகப் பயணிகள் மீது பழிசுமத்திவிட்டு முகமூடி அணிந்துகொண்டு கூட்டத்தோடு கூட்டமாகத் தப்பியோடியுள்ளார். இச்சம்பவத்தை ‘நீது’ என்ற பயணி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிடவே, ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“30 அடி ஆழத்தில் எலும்புக் கூடு”…. மனைவியை கொன்று நெடுஞ்சாலை மணலில் புதைத்த கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்…. திடுக்கிடும் சம்பவம்….!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லைப்பாறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36), தனது மனைவி கவுசல்யாவை (32) குடும்பத் தகராறு…

2 minutes ago

ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில்…

8 minutes ago

“அதிபர் டிரம்ப் இறந்துவிட்டாரா?”…. ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் உலக அரங்கில் வெடித்தப் புயல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில்…

9 minutes ago

திடீர் திருப்பம்…. கவிதா ஜவஹருக்கு பதவி.. திமுக டூ அரசு பொறுப்பு…. அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான கவிதா ஜவஹர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.…

14 minutes ago

நஸ்ரியா vs சூர்யா…! உண்மை இதோ… சூர்யாவுக்கு பல்பு கொடுத்த நஸ்ரியா?!… 3 படங்களை நிராகரித்தது உண்மையா?… வெடித்த சர்ச்சை…!!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பர நிகழ்வுகள்…

22 minutes ago

அடுத்த ஹீரோ!… கோலிவுட்டில் புதிய என்ட்ரி… மருமகள் கோரிக்கை… நெப்போலியன் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக்…

28 minutes ago