2026 ஐபிஎல் போட்டிக்கான தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை போட்டியில் பங்கேற்க மணிகள் விரைவில் வெளியிட உள்ளன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான தகவல்களின்படி, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோடி, குர்ஜாப்னீத் சிங் ஆகியோர் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றதால் அவரது இடமும் காலியாகியுள்ளது.
இதனால் அணியின் பர்ஸ் சற்று விடுவிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கேமரூன் கிரீன் போன்ற மார்க்கீ வீரர்களை ஏலத்தில் வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷிவம் துபே, எம்.எஸ். தோனி, மதீஷா பதிரனா, ரசின் ரவீந்திரா, தீபக் ஹூடா உள்ளிட்டோர் ரிட்டெய்ன் செய்யப்படலாம். தீபக் ஹூடா மற்றும் ரசின் ரவீந்திரா கடந்த சீசனில் சொதப்பினாலும், அவர்களது திறமை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிட்டெய்ன் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
