கணவர், மகள் இருக்கும் போதே வந்த கள்ளக்காதலன்…! “அறையில் மனைவியுடன் உல்லாசம்…” பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2025

Spread the love

குளச்சல் கடற்கரை கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் மீனவர் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் மீன் பிடிக்க சென்றபோது மனைவி வேறு வாலிபருடன் தகாத உறவு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இது தெரிய வந்ததும் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இதே பிரச்னையால் தகராறு நடந்தது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் இருவரும் தனி அறைகளில் தூங்கச் சென்றனர். மகள் கணவருடன் இருந்தார். அப்போது நள்ளிரவில் சத்தம் கேட்டு கணவர் கண்விழித்தார். மனைவி கோபத்தில் தனி அறைக்குச் சென்றதால் ஏதாவது தீவிர முடிவு எடுத்துவிடக் கூடாதே என அறைக்குச் சென்றார். அங்கு மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் இருவரையும் அடித்ததால் கள்ளக்காதலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

   

சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். இதற்கிடையே திடீரென கள்ளக்காதலன் டேபிளில் இருந்த பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.