கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய கப்பல்… அலையில் மிதக்கும் ஐபோன்கள்…. அள்ளிச் செல்ல மக்கள் போட்டி.. ஹார்முஸ் ஜலசந்தியில் அதிர்ச்சி காட்சி….. வைரலாகும் வீடியோ….!

Spread the love

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் கடும் போர் பதற்றத்திற்கு மத்தியில், சிங்கப்பூர் கொடியுடன் 2,500 கண்டெய்னர்களுடன் பயணித்த ‘ஜிஎஃப்எஸ் பிரைட்’ (GFS Pride) என்ற சரக்குக் கப்பல் ஈரானிய கடற்படையின் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்து கடலில் மூழ்கியது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், தடைசெய்யப்பட்ட கடல்வழிப் பாதையில் சென்றபோது இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாகக் கப்பலில் இருந்த பல கண்டெய்னர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதோடு, அவற்றுக்குள் இருந்த விலையுயர்ந்த ஐபோன்கள் மற்றும் வாசனை திரவிய பாட்டில்கள் கடல் அலைகளில் மிதக்கத் தொடங்கின. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஓமானி மீனவர்கள் சிறிய படகுகளில் சென்று, கடலில் மிதந்த இந்த மதிப்புமிக்கப் பொருட்களை மொத்தமாக அள்ளிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தற்போது உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் பதற்றமான கடல் பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தி உருவெடுத்துள்ளது. அமெரிக்காவுடனான மோதல் காரணமாக ஈரான் இந்தப் பாதையை முற்றிலுமாக மூடியுள்ளதுடன், ஐஆர்ஜிசி படையினரின் கடுமையான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது; அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களும், கடல் கண்ணிவெடித் தாக்குதல்களும் நடத்தப்படுவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

போர் அபாயமும் உயிரைப் பற்றிய அச்சமும் நிறைந்த இந்தக் கடுமையான சூழலிலும், கடலில் மிதந்த விலையுயர்ந்த பொருட்களை மீட்க பொதுமக்கள் ஆபத்தான முறையில் படகுகளில் சென்றுள்ள சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார வர்த்தகத்திற்கு அத்தியாவசியமான இந்தப் பாதையில் தொடரும் பதற்றம், சர்வதேச நாடுகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

கதறிய பிள்ளைகள்…! மாமியார், மருமகளை குத்தி கொன்ற நபர்… போலீசாரின் அலட்சியம் தான் காரணமா…? நடுங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஐதராபாத் மீர்பேட் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார் மற்றும் மருமகளை நபர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்த…

3 minutes ago

செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்…. சமையலர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… அலறிய சிபிசிஐடி…. அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ம் தேதி…

8 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தலில் EPS போட்ட மாஸ்டர் பிளான்…. கை நழுவுகிறதா அதிமுகவின் பலம்?…. பரபர டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் நடைபெறவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் தங்களின்…

20 minutes ago

கடவுளே இப்படியா ஆகணும்..? ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்… 23 வயது இளம்பெண் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதூன் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 25 வயது இளம் தாய், சிகிச்சை…

20 minutes ago

“ஜிம்மில் இருந்து திரும்பிய 5 நிமிடத்தில் நேர்ந்த கொடூரம்”…. துடிதுடித்த இளம்பெண்…. கொச்சியில் நடுங்க வைக்கும் பேருந்து விபத்து….!

கொச்சியில் தனியார் பேருந்து மோதியதில் 29 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கேரளாவில் அதிகரித்து வரும் அதிவேக மற்றும்…

31 minutes ago

உணவளித்த நண்பர்கள்… இரவில் குவியும் நூற்றுக்கணக்கான வாயில்லா ஜீவன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

துருக்கியில் இரண்டு நண்பர்கள் இணைந்து தெரு விலங்குகளுக்கு அளித்த உணவால் நூற்றுக்கணக்கான விலங்குகள் பயனடைந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில்…

37 minutes ago