அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரு இளம்பெண்கள், போதை தலைக்கேறிய நிலையில் பொதுச்சாலையிலேயே இறங்கி கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் வார்த்தை மோதலாகத் தொடங்கிய இவர்களது வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களிலேயே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு குடுமிப்பிடிச் சண்டையிடும் அளவுக்குக் கைக்கலப்பாக மாறியுள்ளது.
நடுரோட்டையே WWE சண்டை வளையமாக மாற்றி இவர்கள் செய்த இந்த அதிரடி ரகளையால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியது. சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரும் என்னவென்று புரியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் போதையில் இருந்த அப்பெண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இச்சம்பவம் குறித்து இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
