உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பர்ஹான் என்பவருக்கும் ஜான்சியைச் சேர்ந்த உஸ்மா என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. பர்ஹானுக்கு முதல் மனைவி மூலம் மூன்று குழந்தைகளும், உஸ்மாவுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்த நிலையில், ஒருவரின் குழந்தைகளை மற்றொருவர் கவனித்துக் கொள்வது என்ற நிபந்தனையோடு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து உஸ்மாவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த கணவன் பர்ஹானைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில், உஸ்மா தன் குழந்தைகளுக்குச் சமையல் செய்து தர மறுத்ததாகவும், கைபேசியைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து அவரைப் படுகொலை செய்ததாகவும் பர்ஹான் ஒப்புக்கொண்டுள்ளார். கணவனின் ஆத்திரத்தால் ஒரு பெண் உயிரை இழந்துள்ள நிலையில், தாயையும் தந்தையையும் இழந்து 5 குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
