2005-ல் இன்டர்வியூ.. 2026-ல் அப்பாயிண்ட்மென்ட் லெட்டர்.. 60 வயதில் கடிதத்தைப் பார்த்து கதறிய முதியவர்.. அரசு தேர்வாணையத்தின் விசித்திர கூத்து..!!

Spread the love

கேரள மாநிலம் மலப்புறத்தைச் சேர்ந்த 60 வயதான அப்துல் மஜீத் என்பவருக்கு, அம்மாநில பொதுச்சேவை ஆணையத்திடம் (PSC) இருந்து பகுதிநேர இளநிலை அரபு மொழி ஆசிரியருக்கான பணி நியமனக் கடிதம் கடந்த மாதம் வந்துள்ளது. இதைப்பார்த்து அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்; காரணம், இந்த வேலைக்கான தேர்வை அவர் எழுதியது 2005ஆம் ஆண்டில்! மேலும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் 2008ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்ட நிலையில், 18 ஆண்டுகள் கழித்து இந்த உத்தரவு அவரிடம் வந்து சேர்ந்துள்ளது.

இந்த அதிரடி தாமதம் குறித்து வேதனையுடன் பேசியுள்ள மஜீத், “எனக்கு 60 வயதைக் கடந்த பிறகு அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது; இந்தத் தற்போதைய நிலையில் இந்த வேலை எனக்கு எந்தப் பயனும் தராத அளவுக்கு மிகத் தாமதமாக வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தகுதியான நபர்கள் கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு பணியிடத்திற்காகவே, பழைய பட்டியலின் அடிப்படையில் தற்போது மஜீத்துக்கு இந்தத் தேர்வு கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகளில் கடிதம் கிடைத்த 3 மாதங்களுக்குள் ஆவணங்களைச் சமர்ப்பித்து பணியில் சேர வேண்டும் என்பது விதியாகும். ஆனால், மஜீத்தின் பள்ளிச் சான்றிதழின்படி அவரது பிறந்த தேதி மே 27, 1966 ஆகும். இதன் மூலம் அவர் 60 வயதை எட்டி, அரசு நிர்ணயித்துள்ள ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், 20 ஆண்டுகள் காக்க வைத்து வந்த இந்த அரசு வேலைக்கு அவரே தகுதியற்றவர் ஆகிப்போனதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.

Muthu Mani

Recent Posts

காலை 10 மணிக்கு கதவடைப்பு… 11:30-க்கு போலீசாருடன் மோதல்… பனையூர் தவெக அலுவலகத்தில் திடீர் ட்விஸ்ட்… அலறியடித்து பின்வாசல் வழியே ஓடிய அதிமுக விஐபிக்கள்….!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…

9 minutes ago

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

21 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

25 minutes ago

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

35 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

47 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

54 minutes ago