தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாட கூடிய ஒரு நடிகராக இருந்தவர் தான் எம்ஜிஆர். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அனைவரும் போற்றக்கூடிய எம்ஜிஆர் நெருங்கிய நட்புடன் இருந்தது என்றால் அது சின்னப்ப தேவருடன் தான். இருவருமே நெருங்கிய நண்பர்கள். எம்ஜிஆரை வைத்து சின்னப்பா தேவர் கிட்டத்தட்ட 16 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர்களுடைய நட்பை பார்த்து சினிமா உலகில் வியந்தவர்கள் பலர். இப்படி இருக்கையில் இருவரும் சினிமாவுக்குள் வந்த புதிதில் ஒரு நாள் சின்னப்பா தேவர் எம்ஜிஆர் இடம் நாம் இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம், நம் இருவரில் யார் முதலில் முன்னுக்கு வருகிறாரோ அவர் அடுத்தவரை கை தூக்கி விட வேண்டும், இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு எம்ஜிஆர்யும் சரி என்று தலையாட்டி உள்ளார்.

பின்னர் 1947 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைப்படத்தில் சின்னப்பா தேவரை ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனரிடம் வேண்டி கேட்டுள்ளார். அதன்படி அந்த படத்தில் சிறு வேடத்தில் சின்னப்பா தேவர் நடித்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்த பிறகு சின்னப்பா தேவருக்கு அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சின்னப்பா தேவர் எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்று நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்கப் போகிறேன் நீங்கள் தான் அதில் ஹீரோவாக நடிக்க வேண்டும், முன்பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன்னுடைய கையில் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். சின்னப்பா தேவர் இவ்வாறு கூறியதும் இருவருக்குள்ளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் எம்ஜிஆருக்கு ஞாபகம் வந்தது. உடனே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். அப்படிதான் சின்னப்பா தேவர் தொடங்கிய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படமான தாய்க்குப் பின் தாரம் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சின்னப்பா தேவர் தயாரித்த 15 திரைப்படங்களில் எம்ஜிஆர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர்ருக்கு ஒருமுறை காலில் அடிபட்டு இருந்த போதும் சரி எம்ஜிஆர் எம்ஆர் ராதாவால் சுடப்பட்ட போதும் சரி சின்னப்பா தேவர் தான் அவருக்கு உதவினார். எம்ஜிஆர் அவ்வளவுதான் கதை முடிந்தது என்று பலரும் சொன்னபோது கூட துணையாக நின்று அவரை கை தூக்கி மேலே விட்டது சின்னபா தேவர் தான். அந்த அளவிற்கு இருவரின் நட்பு மிக இறுக்கமாக இருந்துள்ளது.
