தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ் இல்லையா?.. இதுவரை பலரும் அறியாத உண்மை தகவல்..!

By Nanthini on சித்திரை 23, 2025

Spread the love

தமிழிலே வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ் என்பது அனைவரும் அறிந்தது தான். காளிதாஸில் பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தன. எனினும் 1931 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் மாபெரும் வெற்றியை பெற்றது. டி.பி.ராஜலட்சுமியின் பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. சினிமா தொழில்நுட்பம்  குறித்த புரிதல் இல்லாத காலகத்தில், அதன் கோளாறுகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. இந்தத் திரைப்படத்தை தயாரித்தவர் ஆர் தேசிர் இரானி என்பவர். இந்த காளிதாஸ் திரைப்படத்தை பொருத்தவரை முதலில் இப்படத்தை முழு நீள திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பல வினோத விஷயங்கள் எல்லாம் நடைபெற்றது.

தமிழில் வெளியான முதல் திரைப்படம் காளிதாஸ்! – எக்ஸ்க்ளூசிவ் By கட்டிங்  கண்ணையா! - Cinema

   

படத்திற்கான ஒளிப்பதிவு கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்த கருவிகள் ஆங்கில வசனத்தை மட்டும் தான் பதிவு செய்யுமா அல்லது தமிழ் வசனங்களையும் பதிவு செய்யுமா என்ற குழப்பம் இருந்தது. இதனால் தயாரிப்பாளர் சிலரை பேச வைத்து அந்த கருவி பதிவு செய்கிறதா என்று சோதித்துப் பார்ப்போம் என முடிவு செய்தார். அப்படி பிரம்மாண்டமாக எடுக்க நினைத்த இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பாம்பேவுக்கு சென்றவர் தான் இப்படத்தின் கதாநாயகி டிபி ராஜலக்ஷ்மி.

   

T. P. Rajalakshmi - Wikipedia

 

இவர் பம்பாய்க்கு சென்றதும் ஒரு பாட்டை கொடுத்து முதலில் பதிவு செய்ய வைத்திருக்கின்றனர். இந்த பாட்டை கொடுத்து பாடிக்கொண்டே ஆடுங்கள் என்று சொன்னதும் எனக்கு ஆட தெரியாதே என்று கூறிவிட்டு டிபி ராஜலஷ்மி அப்படியே நின்றார். பரவாயில்லை உங்களுக்கு தெரிந்ததை ஆடுங்கள் என்று கூற அவரும் ஒரு பாடலை பாடிக் கொண்டே நடனமாடியுள்ளார். அந்தப் பாடல் அந்தப் படத்தில் மட்டும் ஹிட் கொடுக்காமல் பட படங்களிலும் இணைத்து காட்டப்பட்டது.

T.P.Rajalakshmi [heroine, female director and producer] | Antru Kanda Mugam

இப்படி இந்த படம் வெளியான நிலையில் தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ் கிடையாது என குண்டூசி கோபால் கூறுகிறார். இந்தப் படத்தில் கதாநாயகி தமிழில் பேச கதாநாயக தெலுங்கில் பேச மற்றொரு நடிகர் இந்தியில் பேசுவார். இப்படி இருக்கையில் இந்த திரைப்படம் முதல் பேசும் திரைப்படம் கிடையாது இந்த படத்திற்குப் பிறகு வெளியான கால வரிசை என்ற திரைப்படம் தான் முதல் பேசும் திரைப்படம் என அவர் கூறுகிறார். இவ்வாறு பல விவாதங்கள் இருந்தாலும் இன்று வரை இந்த திரைப்படம் தான் தமிழில் முதல் பேசும் திரைப்படம் என்று கூறப்படுவது மட்டுமல்லாமல் அந்த காலகட்டத்தில் பெரிய ஹிட் கொடுத்தது.