கோடை காலம் வந்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்ட புதுப்படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு கமல்ஹாசன் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக கூடிய படங்கள் குறித்து எதிர்பார்க்கலாம்.

கேங்கர்ஸ்:
வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் அவரை ஹீரோவாக நடித்துள்ள சுமோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் வடிவேலு, வாணி போஜன் மற்றும் கேத்தரின் தெரசா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சுமோ:
கேங்கர்ஸ் திரைப்படத்திற்கு போட்டியாக சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் ஏப்ரல் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ரெட்ரோ:
கங்குவா படத்தின் தோல்வியை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தை டோடி நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வருகின்ற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று எந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

டூரிஸ்ட் பேமிலி:
திரைப்படத்திற்கு போட்டியாக புது முக இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
![]()
மாமன்:
விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மாமன். இந்த திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற மே 16ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல்:
கடந்த சில வருடங்களாக ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தை பிரேமானது இயக்கியுள்ள நிலையில் படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஏஸ்(Ace)
விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ஏஸ் திரைப்படம் வருகின்ற மே மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தத் திரைப்படத்தை ஆறுமுகக்குமார் இயக்கியுள்ள நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

தக் லைப்:
விஜய் சேதுபதியின் படத்துக்கு போட்டியாக வருகின்ற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ள நிலையில் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
