இனி இவர்கள் Instagram பார்க்க முடியாது… இன்று முதல் அமலான புதிய கட்டுப்பாடு… பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களான facebook மற்றும் instagram உள்ளிட்ட செயலிகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக instagram செயலி மக்களை அதிக அளவு கவர்ந்து உள்ளதால் மேலும் பயனர்களை தங்கள் பக்கம் இருக்கும் வகையில் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராமில் பல கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இளம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டு நடைமுறையை அக்டோபர் 15 இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது திரைப்படங்களுக்கு வழங்கப்படும் Pg-13 ரேட்டிங் போன்று, இனி அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை 18 வயதுக்கு குறைவான பயணங்கள் பார்க்க முடியாது. இந்த புதிய விதிமுறை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி instagram பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.