தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கரூர் துயர சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு உள்ளது.
ஒருவேளை அப்படி கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கூட்டணிக்காகவே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக பேசி வருகிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே கரூர் துயரத்திற்கு பிறகு இபிஎஸ் விஜய்க்கு சாதகமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
